Sunday, January 17, 2010

காஸ் இனைப்பு

நானும் எனது நண்பர் பாலாஜியும் புது காஸ் இனைப்பு வாங்க இண்டேன் காஸ் டீலரிடம் சென்றோம்.

எனது நண்பரிடம் ரேசன் அட்டை,பணம் 2500 எடுத்து வருமாறு சொன்னார்கள்.

அந்த டீலர் அலுவலகம் முழுவதும் ‘Indane recommended' அடுப்பு என்று கேள்வி படாத அடுப்பு படத்தை ஒட்டி வைத்திருந்தார்கள்.

நண்பர் பணம் கட்ட சென்றவுடன், இன்னும் 2000 ரூபாய் அடுப்புக்கு கேட்டார்கள். இந்த டீலர் அடுப்புக்கு மார்க்கட்டிங் பண்ணுகிறார். அடுப்பு என்னிடம் உள்ளது என்று சொன்னவுடன் அவர்கள் முகமே சரி இல்லை. எப்படியாவது அடுப்பை தலையில் கட்ட முயன்றார்கள். முடியவில்லை.

பிறகு ரூபாய் 2500 பணம் கட்டினார் எனது நண்பர். 2000ரூபாய்க்கு மட்டும் ரசீது கொடுக்க பட்டது.ரூ 500க்கு ரசீது கேட்டபோது எங்களுக்கு அடி ஒன்றுதான் இல்லை. பணம் வாங்குபவருக்கு ஒரே டென்ச்ன்.


காஸ் டீலரிடம் உள்ள பிரச்சணைகள்

1. புது கண்க்சன் வாங்கும் போது பல பொருள்களை கண்டிப்பாக வாங்க வேண்டும் என்று
கட்டாயபடுத்துவது.

2. ரசீது இல்லாமல் பணம் வாங்குவது.

3. காஸ் பதிவு செய்து 1 மாதம் வரை கொடுக்காமல் இருப்பது.(முக்கியமாக பாரத் காஸ்)

4. அதிக விலைக்கு சிலிண்டரை விற்று விடுவது.

5. மிகவும் மோசமான நுகர்வோர் சேவை.

1 comment:

R A M E S H said...

Better write this in below link am sure that you will get a good response...

http://webapp.indianoil.co.in/paribhavam/?toMktgIS=2

Regds
Ramesh