உரை மனங் கடந்த வொருபெருவெளிமேல்அரைசுசெய் தோங்கு மருட்பெருஞ்ஜோதி
துன்பளித் தாங்கே சுகமளித் துயிர்களைஅன்புறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
முட்டைவாய்ப் பயி முழுவுயிர்த் திரள்களைஅட்டமே காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
எப்படி யெவ்வுயி ரெண்ணின வவ்வுயிர்க்கப்படி யளித்தரு ளருட்பெருஞ் ஜோதி
பேருறு நீலப் பெருந்திரை யதனால்ஆருயிர் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
பச்சைத் திரையாற் பரவெளி யதனைஅச்சுற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
செம்மைத் திரையாற் சித்துறு வெளியைஅம்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
பொன்மைத் திரையாற் பொருளுறு வெளியைஅண்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
வெண்மைத் திரையான் மெய்ப்பதி வெளியைஅண்மையின் மறை க்கு மருட்பெருஞ் ஜோதி
கலப்புத் திறையாற் கருதனு பவங்களைஅலப்புற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
விடய நிலைகளை வெவ்வேறு திரைகளால்அடர்புற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
படைக்குந் தலைவர்கள் பற்பல கோடியைஅடைப்புறப் படைக்கும் அருட்பெருஞ் ஜோதி
காக்குந் தலைவர்கள் கணக்கில்பல் கோடியைஆக்குறக் காக்கு மருட்பெருஞ் ஜோதி
அடக்குந் தலைவர்க ளளவிலர் தம்மையும்அடர்ப்பற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
மறைக்குந் தலைவர்கள் வகைபல கோடியைஅறத்தொடு மறைக்கு மருட்பெருஞ் ஜோதி ..
தெருட்டுந் தலைவர்கள் சேர்பல கோடியைஅருட்டிறந் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி
தானொரு தானாய்த் தானே தானாய்ஊனுயிர் விளக்கு மொருதனிப் பொருளே
பொய்ந்நெறி யனைத்தினும் புகுத்தா தெனையருட்செந்நெறி சொத்திய சிற்சபைச் சிவமே
உயிரெலாம் பொதுவி னுளம்பட நோக்குகசெயிரெலாம் விடுகெனச் செப்பிய சிவமே ..970
2 comments:
கடவுள் இருக்கிறாரோ , இல்லை யோ.. ஆனால், தமிழ் பாடல்கள் அனைத்தும் இனிமை ,,, நன்றி
Antha inimai than kadavul..
Post a Comment