Sunday, February 8, 2009

ஜோதி கருணை









இன்று தைபூசம். வடலூர் ராமலிங்க சுவாமிகள் ஜோதி வடிவம் ஆன நாள்.
ஜனவரி மாதம் 2003 எனக்கு வேலை இல்லை, நான் வேலை தேடி சென்னையில் அலைந்து கொண்டிருந்த காலம். மன நம்பிக்கை குறைந்து விட்ட நேரம்.

அப்பொழுது நான் எனது நண்பர் சுரேஸுடன் வடலூர் சென்றேன். 1 வாரம் அன்னதானம் செய்வார்கள். பணம் கொடுக்க நிறைய மக்கள் உண்டு. ஆணால் அங்கு வேலை செய்ய ஆட்கள் அதிகம் கிடையாது. 4 நாட்கள் வடலூரில் தங்கி இருந்து பந்தி பரிமறுவது, உண்ட பின் இலை எடுப்பது என்று பல வேலைகள் செய்தோம்.

நான்கு நாட்கள் ஜோதி தரிசனம் கிடைத்தது. வள்ளல் பெருமான் அமைத்த
அனையா அடுப்பு, அனையா ஜோதி, நீரில் விளக்கு எரித்தத இடங்களை பார்த்தோம்.

1. ஜோதி - விளக்கம்
2. சீவகாருண்யம்
3. பசித்தோர்க்கு உணவு கொடுத்தல்
4. வள்ளல் பெருமான் வரலாறு
5 அருட்பெரும் ஜோதி அகவல்
என பல விசையஙகளை தெரிந்து தெரிந்து கொண்டேன்.

பிற்கு சிதம்பரம் நடராஜர் தரிசனம் பெற்று சென்னை திரும்பினேன்.

அடுத்த நாள் எனக்கு சென்னையில் வேலை கிடைத்தது.

அருட்பெரும் ஜோதி தனி பெரும் கருணை


எல்லா உயிர்களையும் தன்னுயிர்போல் எண்ணும் ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமையைக் கைக்கொள்க.

3 comments:

சாணக்கியன் said...

நான் போய் 4 நாட்கள் சேவை செய்து வந்தால் எனக்கு ‘கார்’ கிடைக்குமா? :-) என்னுடைய இப்பொழுதைய எதிர்பார்ப்பு அதுவாகத்தான் இருக்கிறது.

உங்கள் செண்டிமெண்டை உடைக்க அல்ல... ’சும்மா வெளாட்டுக்கு’- :-)

Sivamjothi said...

car yenna brammea kidaikkum

Shakthiprabha (Prabha Sridhar) said...

வள்ளலாரைப் பற்றி நிறைய எழுதுங்களேன்.