- பரங்கி காய் சட்னி
- பரங்கிக்காய் - ஒரு துண்டு
- காய்ந்த மிளகாய் - 4
- உளுந்து - கால் கப்
- சீரகம் - ஒரு தேக்கரண்டி
- பெருங்காயம் - ஒரு தேக்கரண்டி
- புளி - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவ
முதலில் பரங்கிக்காயின் தோலை நன்கு சீவி எடுத்து அலசி விட்டு நறுக்கிக் கொள்ளவும். |
பேனில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுந்து, காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து வதக்கவும். |
வதங்கியதும் நறுக்கின பரங்கிக்காய் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். கடைசியாக புளி, பெருங்காயம் சேர்த்து லேசாக வதக்கி ஆற வைக்கவும். |
உப்பு சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து, மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். சுவையான பரங்கிக்காய் சட்னி தயார் |
கோவக்காய் சட்னி
- கோவக்காய் - 100 கிராம்
- வெங்காயம் - பாதி
- பூண்டு - 10 பல்
- காய்ந்த மிளகாய் - 5
- பச்சை மிளகாய் - 5
- முழு தனியா - ஒரு மேசைக்கரண்டி
- வெந்தயம் - அரை தேக்கரண்டி
- புளி - சிறிது
- உப்பு - தேவைக்கு ஏற்ப
- எண்ணெய் - தேவைக்கு ஏற்ப
- தாளிக்க:
- கடுகு - கால் தேக்கரண்டி
- கறிவேப்பிலை - சிறிது
தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ளவும். | |
| கோவக்காயை நன்கு அலசி விட்டு இருமுனைகளையும் நறுக்கி எடுத்து விடவும். பிறகு நீளவாக்கில் நான்காக நறுக்கி கொள்ளவும். |
| ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய கோவக்காய், வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், வெந்தயம், முழு தனியா மற்றும் புளி எல்லாம் சேர்த்து நன்கு வதக்கவும். |
வக்காய் நன்கு வதங்கியதும், அடுப்பை நிறுத்திவிட்டு எல்லாவற்றையும் நன்கு ஆற வைக்கவும். | |
| பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அரைக்கும் போது, கோவக்காய் தவிர மற்ற பொருட்கள் சேர்த்து நன்கு அரைத்து விட்டு, கடைசியில் கோவக்காய் சேர்த்து அரைக்கவும். |
| கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். சுவையான கோவக்காய் சட்னி தயார். வழக்கமாக கோவைக்காயில் செய்யும் கூட்டு, சாம்பார், பொரியல் தவிர இந்த சட்னியும் செய்யலாம். இந்த கோவக்காய் சட்னி இட்லி, தோசைக்கு நன்கு பொருந்தும். சாதத்துடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும் |
பச்சை மிளகாயினால் உண்டாகும் சூட்டை தணிக்க, இதில் சிறிது வெந்தயம் சேர்க்கிறோம். சட்னியை அரைத்த பின்(தாளிக்கும் முன்) மீண்டும் நன்கு வதக்கி கொண்டால் 2 அல்லது 3 நாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். சுவையும் நன்றாக இருக்கும்