சத்ய சாய் விளக்கங்கள்.
1. ப்ரம்மச்சாரி
க்ருகஸ்த்தர் ஆகாத அனைவரும் ப்ரம்மச்சாரி என நம்பப்படுகின்றனர்.
அது மிகவும் தவறு. உலக மயக்கதிலிருந்து தமது மனதை யாரல்லாம் விடுவித்து
இருக்கிறார்களோ, யாரல்லாம் இடைவிடா இறைச் சிந்தனயில் இருக்கிறார்களோ,
வெறும் கேளிக்கைகளையும் வேடிக்கை வினோதங்ளையும் பார்க்காமல் கேட்காமல்
நாக்கு ருசியுலும் ஈடுபடாமல் இருக்கிறார்களோ, இன்ப துன்பத்துக்கு அடிமையாகதிருக்றார்களோ,
மனம் புத்தி சித்தி ஆகியவற்றைச் சஞ்சலப்படாத மன ஒருமைப்பாட்டுடன் பிரம்மதத்துவத்தின் மீது
செலுத்துகிறார்களோ அவர்கள் மட்டும் ப்ரம்மச்சாரிகள் எனும் பெயருக்கு பொருத்தமனவர்கள்.
2.க்ருகஸ்த்தன்
பலர் நினைப்பது போல் திருமணம் செய்து கொண்டு மனைவி மக்களுடன்
வாழ்வது க்ருஹஸ்த்த ஆஸ்ரமம் ஆகிவிடாது.
ஒருவர் தனக்குரிய சுய தர்மத்தை (கடமையை) புறக்கணிக்காமல் உறவினரையும் மற்றவர்களையும்
சமத்துவ பவனையுடன் நடத்தவேண்டும். மூத்தவர்ளுக்குறிய உரிமைகளைப் பற்றியும் இளையவர்களுக்குரிய
பொறுப்புகள் பற்றியும் அவர் அறிந்திருக்கவேண்டும். உதவுவத்ற்குரிய விருப்பமும் அனுதாபமும் அவரிடம்
முழுமையாக இருக்க வேண்டும். தன்னைச் சார்ந்த் அனைவரையும் அன்புடன் கூடிய அக்கறையுடன் பேனவேண்டும். புதிய உலக அனுபவம் ஒவ்வொன்றும் அவரது விவேகத்தை வளர்ப்பதாக இருக்க வேண்டும்.
மனைவி மக்களை பொறுப்புடன் பேணவேண்டும், காப்பாற்ற வேண்டும்.
குடும்பம் சொத்து நடத்தை தனது அழகு இளமை கல்வியறிவு, சொந்த ஊர், விரத ஒழுக்கத்தில்
தேர்ச்சி ஆகிய எட்டு வகையினாலும் எழும் இறுமாப்பையும் ஆணவத்தையும்(கர்வத்தையும்)
தரைமட்டமாக்க வேண்டும்.
அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நான்கு குறிக்கோளைக் கருத்தில் பதித்த் வண்ணம், உலக உடமைகள்
பெருமளவில் இருப்பினும் அவற்றால் பெருமை அடையாமல் ஒவ்வொரு நாளும் நேரத்தில் ஒரு பகுதியை
பிறர்க்கு சேவைசெய்ய பயன்படுத்த வேண்டும்.
மற்றவர் வீட்டினருக்கு எதிராக எத்திட்டமமும் கொள்ளாமல் மனைவியை நம்ப கூடியவனாகத் தானும்
மனைவின் நம்பிக்கைக்கு பாத்திரமாகக் கூடியவனாக திகழ வேண்டும். ஓருவர் மற்றவரை புரிந்து கொண்டு
முழு நம்பிக்கையுடன் இருத்தல் வேண்டும்.