Saturday, December 6, 2008

பெட்ரோல் சேமிப்பு - எனது மிதிவண்டி

நான் எனது அலுவலகத்துக்கு பைக் அல்லது காரில் செல்வது வழக்கம். வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் இடையே 3 கிமீ.

அப்பொழுது பெட்ரோல் விலை 50ரூபாய் ஆக இருந்தது. குருடு ஆயில் விலை அதிகம் ஆனவுடன் எனது மாத செலவுகள் அதிகமானது.

இதை கட்டுபடுத்த என்ன செய்யலாம் என்று யோசனை செய்தேன். அதற்க்கு கிடைத்த விடை தான் மிதிவண்டி(சைகில்).

எனது பணி காரணமாக, நடை பயிர்ச்சி செய்யமுடியவில்லை. எனது உடல் dஎடையும் குறைக்க முடியவில்லை.

சாப்பிட்டோம் வேலை செய்தோம் தூங்கினோம் என்று இருந்தேன்.
மாத செலவுகள் கட்டுபடுத்த நினைத்த போது தான்இந்த ஞாபகம் வந்தது.

எனது மனைவிடம் ஆலோசனை செய்தேன், மிதிவண்டி வாங்க வேண்டாம்,அதை கொஞ்ச நாள் தான் ஓட்டுவீர்கள் அதற்க்கு பின்பைக் அல்லது காரில் அலுவலகம் செல்ல ஆரம்பித்து விடுவீர்கள், அதனால் மிதிவண்டி வாங்குவதே வீண் செலவு என்று சொன்னார்.

எனது முடிவில் உறுதியாக இருந்தேன். மாத செலவு குறையவும், உடல் ஆரோகியத்துக்கும் , காற்று மாசு படாமல் இருக்கவும்மிதிவண்டி வாங்க முடிவு செய்து விட்டேன்.

மிதிவண்டி கடைக்கு சென்று, கீர் வண்டி வாங்கினேன்.

முதலில் அலுவலகம் செல்ல கூச்சமாக இருந்தது. என்னை பார்த்தவர்கள் பார்வையில் ஒர் ஆச்சர்யம். எனது நண்பர்கள்சிலர் என்னை பாராட்டிணார்கள். சிலர் கிண்டல் செய்தனர்.

ஒரு மாதம் சென்றது. மாதம் ரு 300-500 வரை செலவு குறைந்தது. இரண்டு மாதத்தில் 3கிலோ எடையும் குறைந்தது.



என்னை மாதிரி அலுவலகம் அருகே வீடு இருப்பவர்கள், நடந்தோ அல்லது மிதிவண்டி மூலம் அலுவலகம் சென்றால்
1 உங்கள் உடல் நலத்தையும் பாதுகாக்கலாம்
2 பெட்ரொல் செலவு குறைக்கலாம்.
3 குருடு ஆயில் விலை ஏறாமல் இருக்க நாமும் பங்கு அளிக்கலாம்.
4 காற்று மாசு படாமல் இருக்கும்.


நன்றி மிதிவண்டி.