நான் பிறந்த ஊர் ஒரு கிராமம், ஆரோகியமான ஒரு சூழ்நிலை.எங்கள் வீடு ஒரு தோட்டத்தில் இருக்கிறது.என் அப்பா அம்மா இருவரும் கடின உழைப்பாளர்கள்.என் தோட்டம் கொஞ்சம் பெரியது என்பதால், எப்பொழுதும் 4-5 பேர் வேலைக்கு இருப்பார்கள்.
எங்கள் ஊர் மிகவும் அமைதி யாக இருக்கும். நல்ல காற்று, நல்ல குடி நீர் கிடைக்கும். மண் சுத்தமாக இருப்பதால் வெறும் காலால் நடந்து செல்வேன்.நகரம் மாதிரி கொசு தொல்லை, கரைப்பான் தொல்லை இருக்காது. சிக்னல் தொல்லை, வாகன சப்தம்தொழில்சாலை சத்தம் இருக்காது. பறவை,மாடு ஆடு சப்தம் மட்டும் கேட்கும்.
மிக பசுமயான காய், கீரை, கருவேப்பில்லை ,,,, மட்டுமே உணவுக்கு அம்மா பயன் படுத்துவர்கள்.எங்கள் தோட்டத்தில் காய் இல்லை என்றாள் கவலை இல்லை. எனது உறவினர் தோட்ட ங்கள் அருகில் இருக்கிறது. அங்கு இருந்து கிடைக்கும்.காய் கரி அதிகம் இருந்தால் மாமா, பெரியம்மா தோட்டத்துக்கு கொடுப்போம். என் அப்பா ஒரு சிறந்த விவசாயி. சும்மா ஒரு நாள் இருக்க மாட்டார். தக்காளி, கத்தரி, வெங்காயம்,மக்கா சோளம், பப்பாளி என்று பல வகையான விவசாயம் செய்வார்கள்.அவரது விவசாய நுணுக்கங்கள்பற்றி ஒரு கட்டுரை எழுதவேண்டும்.
எனது தாத்தாவுக்கும் எப்பொழுது எந்த பயிர் விவசாயம் செய்ய வேண்டும் என்று தெரியும். நான் சிறுவனாக இருக்கும் போது என்னை அவருடன் தோட்டத்துக்கு அழைத்து செல்வார். பல நுணுக்கங்கள் சொல்லி கொடுப்பார்.எனது அப்பா சிறந்த விவசாயி என்பதால் இரவு பகல் பார்க்காமல் வேலை செய்வார்கள்.
எங்கள் கிராமம் ஒரு தொழில் நகரம் அருகில் இருப்பதால் யாரும் தோட்ட வேலைக்கு வரமாட்டார்கள். அங்கு நிழலில் வேலை செய்வததாலும் நல்ல சம்பளம் கிடைக்கும் என்பதால் யாரும் வெய்யிலில் வேலை செய்ய விரும்ப மாட்டார்கள். நானும் கூட.
எனது தந்தை மேலா ன்மை மிகவும் சிறப்பாக செய்வார். எனக்கு பாசலின் என்ற கலை கொல்லி மருந்து நீரில் கலக்கும் வேலை. எனது அம்மா ஆட்கள்லுக்கு உணவு மற்றும் காப்பி செய்யும் வேலை.
ஆனால் இன்று அனைவரும் படிக்க தொடங்கியதால்(என்னையும் சேர்த்து) அதனால் ஆடு மாடு பராமரிக்க ஆட்கள் இல்லை. கூலி 150 ரூபாய் ஆகிவிட்டது.வெங்காயம் அதே ரூபாய் 2 தான். எப்படி விவசாயம் செய்ய முடியும். மக்கள் முட்டாள் தனத்தால்/வயிறுக்கும் மரங்கள் வெட்ட படுகின்றது.
இந்த தலைமுறைத்தான் வேலை செய்யும் கடைசி தலைமுறையாக இருக்கும்.