விவசாயம் செய்ய யாரும் முன்வருவது இல்லை. வெயிலில் காய வேண்டும் என்பதை விட மற்ற காரணங்கள் பல உள்ளன.
1. இதை செய்பவருக்கு சமுதாயத்தில் மரியாதை (ஸ்டேடஸ்) இல்லை.
2. கூலி,உரம் மற்றும் தேவை யான பொருட்கள் விலை ஏறி விட்டது.ஆனால் விவசாய பொருள் விலை மட்டும் ஏறவே இல்லை. இதனால் லாபம் இல்லை.
3. மரத்தை வெட்டி விடுவதால் மலை இல்லை. அதனால் நீர் மட்டம் குறைந்து விட்டது
4. பெண் கொடுக்க யாரும் முன் வருவது இல்லை.
5. இதில் வேலை செய்வது கடினம் என்று யாரும் வேலைக்கு வருவது இல்லை
எடுத்துக்காட்டாக எனது சிறு வயதில் ஒரு நாள் கூலி 5 ரூபாய். வெங்காயம் 3-5 ரூபாய் கிலோ. இப்பொழுது கூலி 200 ரூபாய். ஆனால் வெங்காயம் அதே 5 ரூபாய். யார் விவசாயம் செய்வார்கள்?
இந்த தலைமுறையில் எங்கள் ஊரில் யாரும் இல்லை. அனைவரும் நகரத்துக்கு சென்று விட்டனர்.
இப்படி நடந்தால் நகரத்தில் மக்கள் தொகை அதிகம் ஆகிவிடும். இதனால் நகரத்தில் பல இன்னல்கள்.(தண்ணீர், காற்று மாசு படிந்த்து விட்டது, கொசு கரைப்பான் தொல்லை)
தண்ணீர் பிரச்னை இல்லை என்றால் விவசாயம் மாதிரி ஒரு நிம்மதியான வாழ்க்கை கிடையாது.
சுத்தமான தண்ணீர் கிடைக்கும்
சுத்தமான காற்று கிடைக்கும்
வேலை பழு கிடையாது
Traffic zam கிடையாது
Fresh காய்கறி கிடைக்கும்
நமக்கு தேவையான காய்கறிகளை நமது தோட்டத்தில் பச்சை தன்மை
குறையாமல் பறித்து கொள்ளலாம்
மூலிகை செடிகள்
1. துளசி
2. சிறிய நங்கை
3. கற்பூர வள்ளி
4. தூது வாளை
5. கரிசாலை
மரங்கள்
1. நெல்லி
2. மா
3. முருங்கை
4. சீதா பழம்
இதை விட்டு விட்டு நகரத்தில் இருந்தால் நரகம் தான்.
எல்லா நோய்கலுக்கும் மருந்து சாப்பிட்டு உடலை கெடுத்து கொல்ல வேண்டியது தான்.
அதனால் நம் உடல் நலம் மன நலம் காக்க கிராமம் தான் சிறந்தது.
விவசாய குடும்ப்பதில் இருந்து நகரத்தில் இருப்பவர்கள் மீண்டும் விவசாயம் செய்ய வேண்டும்.
அரசாங்கமும் விவசாயம் செழிக்க விவசாய பொருளுக்கு அதிக விலை கொடுக்க வேண்டும்.
பண வீக்கத்தை குறைத்து எல்லா பொருள் விலைகலும் குறைய வேண்டும்.
கிராமஙகள் தான் நமது நாட்டின் முதுகு எலும்பு என்பதை நாம் மறக்க கூடாது.
எப்படி நம் நாட்டுக்காக ரணுவ வீரர்கள் இருக்கிறார்களோ, அதை போல விவசாயிகள்நமது உடலுக்காக/பசிக்காக விவசாயம் செய்கிறார்கள்.
அதனால் நாம் விவசாயம் வளர படு பட வேண்டும்.
மரம் நட நாம் உதவி செய்ய வேண்டும்.
மழை நன்றாக பெய்தால் விவசாயம் வளரும். நகரத்தில் இருப்பவர்களுக்குநல்ல காய் கரி கிடைக்கும்.
எல்லாரும் வேர்வை சிந்தாமால் வேலைசெய்ய நினைப்பததால், விவசாயத்துக்கு மதிப்பு இல்லை.
ஒரு நாள் விவசாயத்துக்கு நல்ல மதிப்பு வரும் என்பது நல்ல நம்பிக்கை.
இப்படி ஒருவரும் விவசாயம் செய்யவில்லை என்றால் இளநீர் 100 ரூபாய் க்கு விற்க நேரிடும். மற்றும் தேவை யான கீரை, மூலிகை, தக்காளி, வெங்காயம் விலைகள் எவ்வளவு ஆகும் என்று சொல்ல முடியாது.
அரசாங்கம் வோட்டு மட்டும் மனதில் வைத்து திட்டம் இடுவதால் தொலை நோக்கு பார்வை இருப்பது இல்லை. விவசாயம் வளர ஆக்கப் பூர்வ முடிவு எடுப்பது இல்லை. தண்ணீர்க்காக உண்ணாவிரதம் இருப்பதை விட்டு விட்டு, மரம் வளர்க்க யாரும் முன்வருவது இல்லை.
அரசு அதிகரிகள் சுயநலம் காரணமாக இன்று விவசாய நிலம் ஸைட் போட்டு வீட்க படுகின்றது. தொழில்வளர்ச்சியும் விவசாய வளர்ச்சியும் சமமாக இல்லை. விருதுகள் விலை ஆகின்றது.
அரசங்கம் அறிவிக்கும் சலுகைகள் விவசாயிகலுக்கு சென்று அடைவது இல்லை. அரசு அதிகாரிகள் அவர்கள் பாக்கட்டில் போட்டு சென்று விடுகிறார்கள்.
இதனால் அரசாங்க சழுகைக்கலை நம்ப முடியாது.
விவசாயத்தை வளர்க்க எண்ண தாண் வழி?