ஒரு குழந்தை பிறந்தவுடன் அதன் கல்யாணம் பற்றி யோசனை செய்கிறார்கள்.
சிலர் பெற்றோர்கள் சொல் படியும், சிலர் தானே முடிவு செய்கிறார்கள். கல்யாணத்தில் அப்படி என்ன ஈர்ப்பு? நமக்கு என்று ஒரு துணை? உடல் உறவுக்கா?எந்த காரணத்திற்கு கல்யாணம் செய்தாலும், நிம்மதியாக வாழ்கிறோமா என்பது தான் முக்கியம்.
இந்த காலத்தில் வரதட்சனையை பெரிதாக இல்லை என்பதால், அதன் மூலம் பிரச்னை வருவது குறைவு தான்.
காதல் திருமணம் செய்தாலும், பெற்றோர்கள் செய்த கல்யாணம் ஆனாலும், இருவரும் ஒன்றாக வாழும் போதுதான்
சிறு சிறு பிரச்சனைக்கும் சண்டை வரும். இருவருக்கும் அநியொந்யம் வர இரண்டு வாருடங்கள் ஆகும்.
ஒருவர் தவறை இன்னொருவர் சொல்லி, தவறை திருத்தி இருவரும் சந்தோஸ்மாக வாழ்வதே சிறப்பானது.
இருவருக்கும் மன ஒற்றுமை வாரத்ற்கு பல காரணங்கள் இருக்கும்.
1. நான் என்ற அகங்காரம்,
2. பொறுமையின்மை.
3. சகிப்புதன்மை இல்லாமை.
4. முன் கோபம்
5. தான் தாய் தந்தை குடும்பமே சிறந்தது என்பது.
6. அதற்கே முக்கியத்துவம் கொடுத்தல்.
மன ஒற்றுமை வர
வாழ்க்கை துணை இடம் அன்பு செலுத்துதல் - unconditional love
துணைக்கு முதல் இடம் கொடுக்க வேண்டும், அவள் தான் வாழக்கை கடைசி வரை வரும் உறவு.
கஸ்டப்படும் போது சிறு சிறு உதவி செய்ய வேண்டும், மாதவிடாய் காலங்களில் வீட்டு வேலைக்கு
உதவி செய்ய வேண்டும்,
இருவரும் நன்கு உடற்பயிற்சி செய்து,உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒத்த மன நிலை வந்த உடன் யோகம் மற்றும் தியானம் செய்து வாழ்வில் நோக்கை அடைய வேண்டும்.
இவ்வாறு செய்ய அன்பும் அணியோனியம் பெருகும்.இந்த நிலையில் குழந்தை பெற்றால்
குழந்தை ஆரோகியமாகவும் மன வலிவும் பெற்று இருக்கும். நன்றாக படிக்கும்.
நீங்கள் இந்த சமுதாயத்திக்கு நல்ல குழந்தை கொடுத்த சந்தோசம் இருக்கும்.
அப்படி இல்லாமல் ஆரோகியம் இல்லாத குழந்தை பெற்று, அடிக்கடி மருத்துவரிடம்
சென்று உங்கள் நிம்மதி கெடுத்து, வேலை கெடுக்க நேரிடும்.
எனது நண்பர் ஒருவருக்கு கல்யாணம் ஆனது. அவருக்கோ பண கஸ்டம்.
மன பெண்ணோ வசதி படைத்தவர். என் நண்பன் தனது சூழ்நிலையை விளக்கினான்.
திருமணம் நடந்தது.அந்த பெண்ணோ தனது மாமனார் மாமியாரை, தாய் தந்தை போல்
கவனித்தாள். வேலைக்கு செல்லும் போது தனது டெபிட் கார்ட் ஐம், பணத்தையும் கணவரிடம் கொடுத்து
கடனை அடைக்க சொன்னாள்.இந்த மாதிரி மனைவி அமைந்தால் வாழ்க்கை சந்தோசமெ.
மற்றொரு நண்பர், இதை போலவே கல்யாணம் செய்தார். அவர் மனைவியோ
மாமனார் மாமியாரைகொஞ்சம் கூட மதிக்க் வில்லை. வீட்டுக்கு வந்தால் அன்பு இல்லாமல்
மனத்தை புண்படுத்தி வந்தாள்.இதனால் கணவன் மனைவிடம் ஒரே சண்டை.
குழந்தை பிறந்த பின் மாமனார் மாமியாரையும் உறவினரை கூட இருக்க அனுமதிக்க வில்லை.
நண்பர் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை.அவர் மன நிம்மதி இழந்தார்.
ஒன்று புரிகிறது, வாழ்க்கை துணை இடம் நமக்கு பாசம் உள்ளதோ இல்லையோ,
அவர் மேல் கருணைஇருக்க வேண்டும். அவருக்கு துன்பம் வந்தால் உதவி செய்ய வேண்டும்.
அவர் மேல் வெறுப்பு இல்லாமல் நாம் கடமையை செய்ய வேண்டும்.
மற்றவரிடம் உள்ள குறையை சரி செய்ய வேண்டுமே தவிர, அதை வைத்து பிரச்னை செய்ய கூடாது.
ஒரு நிகழ்ச்சிக்கு செல்கிறோம். அங்கு அனைவரும் ஒன்றாக கூடி சந்தோசமாக இருந்தால்
எவ்வளவுசந்தோசம் இருக்கும். அங்கு கணவன் மனைவிடம் ஒற்றுமை இல்லை என்றால்,
கூட்டம் 2 பிரிவாகும்.சந்தோசமும் குறைக்கிறது.
கணவன் மனைவி சண்டை போட்டு கொண்டு இருந்தால் குழந்தை மன நிலை வெகுவாக பாதிக்கும்.
அவன் எதிர்காலம் சிறப்பாக இருக்காது.
பொதுவாக எல்லா பிரச்சனைக்கும் அகங்காரம்-EGO தான் காரணம்.
இதை விட்டு எல்லாமே இறைவன்என்று தெரிந்து கொண்டாலெ பிரச்னை வராது.
அதை எப்பொழுதுமே விழிப்புணர்வு இருக்க வேண்டும்.அந்த விழிப்பு சாதாரணமாக வருவது கடினம்.
மனம் அமைதி இருக்க வேண்டும், அது வேண்டுமானால் தியானம் செய்யவேண்டும்.
சிலருக்கு இந்த மன அமைதி இயற்கையாக அமையும்.
தியானம் செய்ய, மனம் அமைதி பெற உடல் ஆரோகியம் தேவை.
உடல் ஆரோகியமாக இருக்க, நல்ல உணவு சாப்பிட வேண்டும். உடற்பயிர்ச்சிசெய்ய வேண்டும்.
உணவு நமது மன
நிலைக்குகாரணியாக உள்ளது. அதனால் சாத்வீக உணவு நல்லது என்று ஞானிகள் கூறி உள்ளார்கள். மாமிசம், கிளங்கு,
பச்சை மிளகாய், மசாலா, வெங்காயம் சத்வீக உணவு அல்ல. அதனால்இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.
குடும்ப வாழ்க்கையில் பல விதமான அனுபவம் பெறுகிறோம்.
1. பெண் தனது புகுந்த வீட்டில் ஏற்படும் நிகழ்வுகள். பொறுப்புடன் இருந்து குடும்பத்தை கவனித்ல்
2. கணவன் மனைவி உறவு மூலம் ஏற்படும் அனுபவங்கள். அன்பு காதல்
3. கர்பினி யாக இருக்கும்போது - பொறுப்பு, பொறுமை, கவனம்
4. குழந்தை பெறும்போது - பொறுமை, சந்தோசம்,
5. வேலைக்கு செல்லும்போது,
6. குழந்தை வளர்த்து பள்ளிக்கு அனுப்புவது - கருணை, அன்பு, பாசம்
7. நன்றாக படிக்க வைப்பது -
8. குடும்பம் சுமை, உறவினருக்கும் நண்பருக்கும் உதவி செய்தும் - ஈகை
9. குழந்தைக்கு மேல் படிப்பிக்கு செலவு - உழைப்பு
10. சொந்த வீடு காட்டுவது, வாகனம் வாங்குதல்.நகை செலவு.
11. குழந்தைக்கு வேலை, கல்யாணம்.பேரன்.
இவ்வளவு அனுபவம் கல்யாணம் பண்ணாத நபருக்கு வரும் என்று சொல்ல முடியாது.
இதை எல்லாம் நான் தான் செய்கிறேன் என்று நின்பவர்கள் மனத்தில் சந்தோசம் இருப்பது
இல்லை. இறைவன் தான் எல்லா செயலுக்கு காரணம் என்று நினைத்தால் வாழக்கை சந்தோசம் தான்.
இத்தனை அனுபவங்கள் இறைவனை அறிய என்பதை மறுக்க முடியாது.
தான் தனது என்று அவர் அவரை கூத்தாட்டுவானாகி நிண்றாயே - மாணிக்கவாசகர்.